06 ஆம் தர ஆங்கில மொழிப் பாடப் பயிற்சிப் புத்தகத்தில் பொருத்தமற்ற இணையத்தளம் ஒன்றின் பெயர் இடம்பெற்றுள்ளதாகக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டையடுத்து, அது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த தகவல் உண்மையென்று தெரிய வந்துள்ளதாகக் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய கல்வி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இப்புத்தகங்களின் அச்சிடும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, குறித்த பயிற்சிப் புத்தகங்களை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்தியுள்ள கல்வியமைச்சு, இது தொடர்பில் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக கல்வியமைச்சு நாளைய தினம் (31) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
TO JOIN WITH WHATSAPP :

0 Comments