மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகாரப் பிரதேசங்களில் இன்று (17) புதன்கிழமை 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மத்திய அதிவேக வீதி நிர்மாணப் பணிகளுடன் தொடர்புடைய நீர் குழாய்களை இடமாற்றும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் இடை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (17) மாலை 4.00 PM மணி முதல் நாளை (18) காலை 7.00 AM மணி வரை இப்பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments