Ticker

10/recent/ticker-posts

வட மாகாணத்தில் இரத்துச் செய்யப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்கள்.

வடக்கு மாகாணத்தில் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுவதாக கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளதையடுத்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீளப் பெறப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றம் 2026 முறையற்றது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது, இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த அனைத்து ஆசிரியர்களின் இடமாற்றங்களையும் மீறப்பெறுவதாக கல்வித் திணைக்களம் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி மன்றுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து குறித்த வழக்கு முடிவுறுத்தப்பட்டது. 


Post a Comment

0 Comments