2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் 2026 பெப்ரவரி 01 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படும் என்று சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கமான பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில் வழமை போன்று அனைத்து வீடுகளுக்கும் அதிகாரிகள் செல்லமாட்டார்கள், பதிலாக ( A) மற்றும் ஏஏ (AA) பட்டியல்களைப் புதுப்பிக்கத் தேவையான வீடுகளுக்கு மாத்திரமே அதிகாரிகள் செல்வார்கள் என்றும் பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகளைக் கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் கண்காணிக்கலாம். ஏதேனும் முறைகேடுகள் இருக்குமாயின் எழுத்துபூர்வமாக முறைப்பாட்டை அளிக்க முடியுமென்றும் குறித்த அமைப்பு கோரியுள்ளது.
இதேவேளை, தேர்தல் காலங்களில் முறைப்பாடுகளை செய்யாமல், ஆரம்பத்திலேயே அரசியல் கட்சிகள் செயலில் ஈடுபட வேண்டும் என்றும் பெப்ரல் மேலும் மக்களை வலியுறுத்தியுள்ளது.

0 Comments