UYSF யோகா அமைப்பின் 04 வது உலக யோகா கிண்ணப் போட்டிகள் இன்று (27) நடைபெறவுள்ளது.
இப்போட்டிகள் இந்தியாவின் டெல்லி நகரில் நடைபெறவுள்ளன. இப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இளம் அணியொன்று இந்தியாவை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.
UYSF யோகா அமைப்பின் இலங்கையினுடைய தலைவராக செயற்படும் சிவசங்கரி சுப்ரமணியின் தலைமையில் 07 பேரை கொண்ட அணி இந்தியாவை நோக்கிப் பயணித்துள்ளது.
இதேவேளை 03 வது ஆசிய பசுபிக் யோகாசனா சம்பியன்சிப் போட்டிகள் இம்மாதம் 03 ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் சிறப்பாக இடம்பெற்றன.
12 நாடுகள் பங்குபற்றிய இப்போட்டியில் இலங்கை 07 தங்கப் பதக்கங்களையும் (Gold Medals), 03 வெள்ளிப் பதக்கங்களையும் (Silver Medals) பெற்றுக் கொண்டது.
இலங்கையை பிரதிநிதித்துவபடுத்தி சென்ற அணியில் பியூமி நிசன்சலா, பயிற்சியாளர்களாக சிவசங்கரி சுப்ரமணியம் மற்றும் சிவசக்தி ஆகியோர் அணியை வழிநடாத்திச் சென்றனர்.
இப்போட்டியில் 2025 ஆம் ஆண்டுக்கான “yoga Rising award ”விருதினை சிவசங்கரி சுப்ரமணியம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 Comments