Ticker

10/recent/ticker-posts

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - கல்வியியல் முதுமாணி (M.Ed) கற்கைநெறி 2025/26

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப் படிப்புகள் பீடத்தினால் (Faculty of Graduate Studies) நடாத்தப்படும் கல்வியியல் முதுமாணி (Master of Education - Batch XVI) கற்கைநெறிக்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அனுமதிக்குரிய தகைமைகள் (Qualifications):

 * அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பட்டம் மற்றும் பட்டப்பின் கல்வி டிப்ளோமா (PGDE).

அல்லது

 * அங்கீகரிக்கப்பட்ட கல்விமாணிப் பட்டம் (B.Ed).

 * பாடசாலை அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் அல்லது கல்விசார் பணியில் அனுபவம்மிக்கவராக இருத்தல் வேண்டும்.


கற்கைநெறி விபரங்கள்:

 *காலம்: 01 வருடம்

 *மொழி: தமிழ் / ஆங்கிலம்

 *கற்கைநெறிக் கட்டணம்: ரூ. 205,000/- (ரூபாய் 5,000 மீளளிக்கப்படும்)

 *தெரிவு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்ப முடிவுத்திகதி: 25/01/2026

விண்ணப்பித்தல் முறைமை:

மக்கள் வங்கியின் கிளையொன்றில் குறிப்பு இலக்கம் 190162500001951 ஊடாக விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 1,000/-  செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவுத் தபால் மூலமாக அல்லது நேரிலோ 25/01/2026 இற்கு முன்னர் சமர்ப்பித்தல் வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

சிரேஷ்ட உதவிப்பதிவாளர்,

உயர்பட்டப்படிப்புகள் பீடம்,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.


விண்ணப்பபடிவத்தை டவுன்லோட் செய்ய:

https://1teachmore.lk/wp-content/uploads/2025/12/application-form-New.pdf






Post a Comment

0 Comments