Ticker

10/recent/ticker-posts

உலகில் தலைநகரே இல்லாத ஒரே நாடு. ஏன் தெரியுமா?

பொதுவாக உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஒரு தலைநகரம் காணப்படும். அந்த தலைநகரத்தில்தான் நாடாளுமன்றம் மற்றும் முக்கிய அரச அலுவலகங்கள் இயங்கும்.

நாட்டினுடைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் நாட்டின் தலைநகரில்தான் வசிப்பார்கள். நாட்டிற்கு மட்டுமல்லாது நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்குகூட தலைநகரங்கள் காணப்படும்.

ஆனால், உலகின் ஒரே நாடு மட்டும் தலைநகரம் இன்றி இயங்கி வருகின்றது.

தெற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான 'நவூரு' (Nauru) உலகில் அதிகாரப்பூர்வமாக தலைநகரம் இல்லாத ஒரே நாடாகும். 

வெறும் 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள நவூரு, பரப்பளவில் உலகின் 03 வது சிறிய நாடாகும்.

மேலும், சுமார் 10,000 மக்கள் தொகையுடன், மக்கள்தொகை அடிப்படையில் 02 வது சிறிய நாடாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




உலகில் தலைநகரே இல்லாத ஒரே நாடு - ஏன் தெரியுமா? | Nauru Is The Only World Country Without Capital


நவூருவின் பாராளுமன்றம், ஜனாதிபதி அலுவலகங்கள், அமைச்சகங்கள், விமான நிலையங்கள் ஆகியவை யாரென் மாவட்டத்தில் இருந்து செயல்படுகிறது. 

Post a Comment

0 Comments