இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு நிறுவகங்களுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- புதிய பட்டுப் பாதைக்கான தேசிய மற்றும் சர்வதேச விஞ்ஞான நிறுவகங்களின் கூட்டு மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குமிடையிலான காலநிலை மாற்றம் மற்றும் சுற்றாடல் மாசடைதல் தொடர்பான சர்வதேச நீர் மாநாட்டினை நடாத்துவதற்கான கருத்திட்ட ஒப்பந்தம்.
- பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் ஹொங்கொங் சீன பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான மனிதன், விலங்குகள், சுற்றாடலுக்கு பரவுகின்ற தொற்றுநோய்கள் பற்றியும் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் உயிர்ம எதிர்ப்பி எதிர்ப்புத்திறன் தொடர்பான தெளிவு மற்றும் மரபணுப் பல்வகைமை ஆராய்ச்சி போன்றவற்றை மேற்கொள்ளும் நோக்கிலான ஆய்வு ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் பொருட்கள் பரிமாற்று ஒப்பந்தம்.
- களனி பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் - கியாகோ தகவல் விஞ்ஞான பட்டப்படிப்புக் கல்லூரிக்குமிடையில் கற்கை ஒத்துழைப்புக்களை அதிகரித்தல், பீடங்கள் மற்றும் மாணவர்களுக்கிடையிலான கல்வி, தொழில் மற்றும் கலாசார ரீதியான செயற்பாடுகள் மூலமாக நல்லுறவை மேம்படுத்தல் மற்றும் ஒருங்கிணைந்த ஆய்வுகள், மாநாடுகள், பயிற்சிப் பட்டறைகளை நடத்துதல் போன்ற நோக்கங்களை அடைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை இந்திய தொழிநுட்ப நிறுவகத்திற்குமிடையிலான பரஸ்பர உடன்பாட்டுடன் கூடிய துறைசார் கற்கைகள் மற்றும் ஆய்வு ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளல், கற்கைத் தகவல்கள் மற்றும் பொருட்கள் பரிமாற்றம், மாணவர்கள் மற்றும் கல்வி ஊழியர்கள் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைந்த மாநாடுகள், கருத்து அமர்வுகளுக்கான அனுசரணைகளை வழங்குதல் போன்ற நோக்கங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- இந்திய கலாசார தொடர்புகள் பேரவை மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்திற்குமிடையிலான வருகை தரு பேராசிரியர்களின் (Visiting Profossers) சேவையை ஒப்பந்த அடிப்படையில் வவுனியா பல்கலைக்கழகத்திற்குப் பெற்றுக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

0 Comments