அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றியதை BBC நிறுவனம் திரித்து வெளியிட்டதாக கூறி, நஷ்ட ஈடு கேட்டு BBC நிறுவனம் மீது டொனால்ட் ட்ரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2021 ஜனவரி 06 ஆம் திகதி உரையாற்றியதை BBC செய்தி நிறுவனம் திரித்து தவறாக வெளியிட்டுள்ளதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
குறித்த புகார் BBC செய்தி நிறுவனத்தின் பணிப்பாளர் டிம் டேவி, செய்திப் பிரிவு தலைவர் டெபோரா டேர்னஸ் ஆகியோர் இராஜிநாமா செய்வதற்கு வழி வகுத்தது.
இதனைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் 10 பில்லியன் டொலர் நஷ்ட ஈடு கேட்டு BBC நிறுவனம் மீது வழக்கொன்றை தொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments