IPL தொடரின் 19 வது சீசன் அடுத்த வருடம் 2026 மார்ச் தொடங்கி 2026 மே வரை நடைபெறவுள்ளது. நடப்பு IPL தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மினி ஏலம் இன்று (டிசம்பர் 16) அபுதாபியிலும் நடைபெறுகிறது.
குறித்த மினி ஏலத்தில் 77 இடங்களுக்காக 1,390 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்த நிலையில், அதிலிருந்து 369 வீரர்கள் இறுதிக்கட்ட ஏலத்திற்காகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஏலத்தை மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகர் நடத்துகின்றார்
முதல் சுற்று ஏலத்தின் கடைசி வீரராக அவுஸ்திரேலிய அணியின் கெமரூன் க்ரீனின் பெயர் இடம் பெற்றது. அவரை ஏலம் எடுப்பதற்காக அணிகளுக்கு மத்தியில் கடுமையான போட்டி ஏற்பட்டது.
முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தை தொடங்கியிருந்த நிலையில், கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடும் போட்டியைக் கொடுத்தது. இதற்கு மத்தியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் ஏலம் கேட்கவே இரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏலத்திலிருந்து விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய ஏலத்தை ஆரம்பித்தது.
பின்னர் க்ரீனை வாங்குவதில் KKR மற்றும் CSK அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவிய நிலையில், ஏலத் தொகையானது இந்திய ரூபாவில் 20 கோடிகளை கடந்திருந்தது.
இறுதியில் கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்திய ரூபாய் 25.20 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதன் மூலமாக IPL தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 'வெளிநாட்டு வீரர்' எனும் பெருமையை கெமரூன் க்ரீன் பெற்றுள்ளார்.

0 Comments