Ticker

10/recent/ticker-posts

கந்தளாய் குளத்தின் வான்கதவுகள் திறப்பு

கந்தளாய் குளத்தினுடைய 04 வான்கதவுகளும் இரண்டாவது முறையாக திறக்கப்பட்டுள்ளன.

கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் நேற்று (14) மாலை நான்கு வான் கதவுகளும் ஒரு அடிக்கு திறக்கப்பட்டுள்ளன.

கந்தளாய் குளத்தினுடைய மொத்த நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாகும். கன மழை காரணமாக தற்போது நீரின் கொள்ளளவு 98,895 கன அடியாக உயர்வடைந்துள்ளது.

தற்போது வினாடிக்கு 750 கன அடி அளவு நீர் வெளியேறி வருவதாகவும் கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர என்பவர் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தின் தாக்கமாக, கந்தளாய் பகுதியில் அடைமழை பெய்து வருகின்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment

0 Comments