Ticker

10/recent/ticker-posts

இலங்கையருக்கு அயர்லாந்தில் கிடைத்த உயரிய கௌரவம்!

இலங்கை தமிழரான ஜெயால்ட் அன்டனி ராசரத்தினத்துக்கு காலநிலை தூதுவர் எனும் விருதினை The National Trust for Ireland அமைப்பு அண்மையில் வழங்கியுள்ளது.

வணிக நிர்வாகம்‌ மற்றும் இணையவழி சந்தைப்படுத்தல் துறையில் முதுமாணி பட்டதாரியான‌ ஜெயால்ட் அன்டனியின் காலநிலை மாற்றம் (Climate Change) மற்றும் காலநிலை நீதி (Climate Justice) தொடர்பான பணிகளை அங்கீகரித்து இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜெயால்ட் அன்டனி ‘Turning poultry waste into Rural Wealth’ மற்றும் ‘Local Voices Drive Circular Transformation’ தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். 


Post a Comment

0 Comments