Ticker

10/recent/ticker-posts

கிண்ணியாவில் சர்வதேச அரபு மொழித்தின விழிப்புணர்வு ஊர்வலம்.

சர்வதேச அரபு மொழித் தினத்தை முன்னிட்டு கிண்ணியா மத்திய கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை (18) காலை 10.30 மணிக்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கல்லூரி அதிபர் எம்.எச்.எம். நஜாத் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் ஆரம்பக் கல்வி பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அரபு மொழியின் முக்கியத்துவத்தையும் அதன் பாதுகாப்பின் அவசியத்தையும் எடுத்துரைக்கும் வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். இந்த ஊர்வலம் கிண்ணியா மத்திய கல்லூரியில் ஆரம்பித்து பிரதான வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments