Ticker

10/recent/ticker-posts

வரலாறு காணாத உச்சத்தை அடையவுள்ள தங்கத்தின் விலை.

2026 இல் உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டுமென்று கணிக்கப்பட்டுள்ளது.

1979 க்குப் பின்னர் முதன் முறையாக 2026 ஆம் ஆண்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சாதனை அளவை எட்டுமென்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 02 வருடங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது, மேலும் அடுத்த வருடம் 01 அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டாலர்களாக உயருமென்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வருடம் ஒக்டோபரில், 01 அவுன்ஸ் தங்கத்தின் விலை $4,381 ஆக உயர்ந்தது, இதற்கு முன்னர் 01 அவுன்ஸ் தங்கத்தின் விலை $3,000 ஐத் தாண்டவில்லை.

அமெரிக்க அதிபரின் புதிய பொருளாதாரக் கொள்கைகளும், ரஷ்ய-உக்ரைன் மோதலும் தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணமென்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


Post a Comment

0 Comments