Ticker

10/recent/ticker-posts

இலங்கையில் உச்சம் தொட்ட மிளகாய் விலை.

பொருளாதார மத்திய நிலையங்களில் கடந்த சில நாட்களாக மிளகாய் வகைகள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பச்சை மிளகாய் மற்றும் கறி மிளகாய் 01 Kg 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொருளாதார வர்த்தக மையத்தின் வர்த்தக சங்கத்தின் தலைவர் U.P. ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் கறிமிளகாய் 01 கிலோ கிராம் ஆயிரம் ரூபாய்க்கும் குடைமிளகாய் 01 கிலோ கிராம் 850 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

கெப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தில், பச்சை மிளகாய் மற்றும் கறி மிளகாய் 01 Kg ஆயிரம் முதல் 1,200 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளன.

தினமும் சுமார் 8 - 10 இலட்சம் Kg காய்கறிகளைப் பெறும் தம்புள்ளை மொத்த சந்தை நேற்று (18) சுமார் 03 - 04 இலட்சம் Kg காய்கறிகள் கிடைத்துள்ளன. மேலும், தாழ்நிலப் பகுதிகளிலிருந்து காய்கறிகளின் விநியோகம் மிக குறைந்த மட்டத்தில் இருந்ததாகவும் ஏகநாயக்க கூறியுள்ளார்.

இதற்கிடையில், 01 Kg போஞ்சி மொத்த விலை ரூபாய் 450-500 இற்கும், 01 Kg தக்காளி, கத்தரிக்காய் மற்றும் பீட்ரூட் ரூபாய் 450 - 500 இற்கும் விற்பனையாகியுள்ளது.

01 Kg கரட் மற்றும் லீக்ஸ் ரூபாய் 220 இற்கும், 01 Kg முட்டைக்கோஸ் ரூபாய் 180 இற்கும், 01 Kg பூசணிக்காய் ரூபாய் 80 - 100 இற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments