இந்தியாவின் தமிழகம், கோயம்புத்தூர் கணபதி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில், தனது கணவனின் மர்ம உறுப்பை மனைவி அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தின் நகன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரதான் ஹசாரிகா (33). இவர் கோவையில் பிளம்பராகப் (Plumber) பணிபுரிந்து வருகின்றார். இவருக்கும் இவரது மனைவி ஜிந்திக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
பிரதான் ஹசாரிகா வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், அடிக்கடி தொலைபேசியில் பேசுவதாகவும் மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சம்பவ தினத்தன்று பிரதான் இளம் பெண் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்ததை மனைவி நேரில் கண்டதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய கணவர் பிரதான் மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவருடைய மனைவி ஜிந்தி கூரிய ஆயுதத்தால் கணவனின் மர்ம உறுப்பைத் துண்டித்து விட்டு வீட்டை தப்பியோடியுள்ளார்.
சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அயலவர்கள், படுகாயமடைந்த பிரதானை மீட்டெடுத்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதுடன், தப்பியோடிய மனைவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

0 Comments