Ticker

10/recent/ticker-posts

நாமல் ராஜபக்க்ஷ இல்லத்தில் விசேட பிரார்த்தனை!

சுனாமி பேரழிவில் உயிரிழந்த மக்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட தித்வா சூறாவளி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.

கொழும்பிலுள்ள அவருடைய இல்லத்தில், தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ வழிபாடுகளை முன்னெடுத்தார்.

சமய வழிபாடுகளின் பின்பு, நாமல் ராஜபக்ஷ தனது சமூக வலைத்தள பக்கத்தில், "நாட்டையே உலுக்கிய ஆழிப்பேரலை ஏற்பட்டு 21 வருடங்கள் நிறைவடையும் இன்றைய நாளில், குறித்த அனர்த்தத்தினால் எம்மிடமிருந்து விடைபெற்று சென்ற அன்பிற்குரிய மக்களை மிகுந்த சோகத்துடன் நினைவு கூர்ந்தேன்.

அதேபோன்று, அண்மைய அனர்த்த நிலைமைகள் காரணமாக உயிரிழந்த மக்களையும் மன வேதனையுடன் நினைவு கூர்ந்தேன் என்று குறிப்பிட்டார்.

மேலும், இயற்கைச் சீற்றங்களுக்கு மத்தியில் நாம் ஒரு தேசமாக மீண்டும் எழுந்து நின்றோம். எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் பாரிய அபிவிருத்திகளினூடாக இந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்பினோம்.

இனிவரும் காலங்களில் இத்தகைய பேரழிவுகள் மீண்டும் ஏற்படக் கூடாது என்று பிரார்த்திக்கின்றேன் என்றும் நாமல் ராஜபக்க்ஷ தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments