Ticker

10/recent/ticker-posts

மலேசிய முன்னாள் பிரதமர் மீண்டும் குற்றவாளி எனத் தீர்ப்பு

 மலேசியாவின் '1மலேசியா மேம்பாட்டு பெர்ஹாட்' அரச நிதியிலிருந்து பல்வேறு பில்லியன் டொலர் ஊழல் செய்த வழக்கில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீண்டும் குற்றவாளி என்று இன்று வெள்ளிக்கிழமை (26) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் '1மலேசியா மேம்பாட்டு பெர்ஹாட்' முதலீட்டு நிறுவனத்திலிருந்து சுமார் 2.3 பில்லியன் ரிங்கிட் பணத்தை மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட 02 வது பெரிய வழக்கில், நஜிப் ரசாக் மீதான 04 அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் மற்றும் 21 பணமோசடிக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மலேஷியாவின் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

72 வயதான நஜிப் ரசாக், ஏற்கெனவே மற்றொரு வழக்கில் தண்டிக்கப்பட்டு 2022 முதல் சிறையிலுள்ளார்.

இவ்வாரத் தொடக்கத்தில் அவர் தாக்கல் செய்த வீட்டுக்காவல் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில், தற்போது இப்புதிய தீர்ப்பு அவருக்கு மேலும் பல வருடங்கள் சிறைத்தண்டனையைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

“பணம் சவூதி அரசர் வழங்கிய நன்கொடை” என்ற நஜிப்பின் வாதத்தை நீதிபதி செகூரா முழுமையாக நிராகரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment

0 Comments