உலகில் கடந்த வாரம் முதல் அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் நகைப்பிரியர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.
அமெரிக்க வரி மற்றும் ஆயுத மோதல்களால் உலகில் வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில் , நாட்டில் நேற்று (25) முதல் இதுவரை மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென்று இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 354,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 327,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் 01 கிராமின் விலை 44,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் 01 கிராமின் விலை 40,938 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

0 Comments