Ticker

10/recent/ticker-posts

ஆசிரியர் சங்கங்கள் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை

பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பில் 2026 ஜனவரி 05 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பதில் கிடைக்கப்பெறாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று கல்வி அமைச்சில் இன்று திங்கட் கிழமை (22) காலையில் நடைபெற்றது. 

கல்விச் சீர்திருத்தங்களுடன் பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பிலேயே குறித்த சந்திப்பு இடம் பெற்றது. 

டிசம்பர் 12 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவிருந்த போதிலும், அதனை மேற்கொள்ளவில்லையென தொழிற்சங்கங்கள் இங்கு சுட்டிக் காட்டின. 

இன்று பிரதமர் தமது கருத்துக்களுக்கு ஓரளவு செவி சாய்த்ததாகவும், அது குறித்து பரிசீலிப்பதாக அவர் தெரிவித்ததாகவும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.


Post a Comment

0 Comments