இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் 2025 (2026) ஆம் ஆண்டிற்கான GCE (O/L) பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக (Paper Marking) தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
முக்கிய விபரங்கள்:
✅ விண்ணப்பிக்கும் முறை:
இணையவழி (Online) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
✅ மேலதிக விபரங்களுக்கு:
https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/
விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் திகதி: 2026.01.08
பரீட்சை நடைபெறும் காலம்: 2026.02.17 முதல் 2026.02.26 வரை.
வழிமுறைகள்:
ஆசிரியர்கள் இணையவழி மூலமாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதனை டவுன்லோட் செய்யவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் வன் பிரதியை (Hard Copy) பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தி 2026.01.08 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பாடசாலை அதிபர்கள் விண்ணப்பங்களை ஒன்லைன் (Online) ஊடாக உறுதிப்படுத்துதல் கட்டாயமானதாகும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
பாடசாலைப் பரீட்சைகள் மதிப்பீட்டுக் கிளை,
இலங்கை பரீட்சைத் திணைக்களம்,
த. பெ. 1503,
கொழும்பு.



0 Comments