Ticker

10/recent/ticker-posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு.

 ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பொழியும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாலை 2.00 PM மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பொழியக் கூடுமென்று அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

அதே நோம் நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் கொழும்பு, களுத்துறை, பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments