காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸின் மூத்த தளபதியான ரேத் சயீத் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த விடயத்தை இஸ்ரேலிய படைகள் அறிவித்துள்ளன.
காசா நகரில் ஒரு காரின் மீது மேற்கொண்ட தாக்குதலின் போதே அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதலில் 04 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 25 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு மூத்த ஹமாஸ் தளபதியை குறிவைத்ததில் இது மிக உயர்ந்த படுகொலையாக இருக்குமென்று கருதப்படுகின்றது.
சயீத் ஹமாஸின் ஆயுத உற்பத்திப் படையின் தலைவரென்று இஸ்ரேலிய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
ஹமாஸின் காசா நகர படைகளுக்கு சயீத்தே தலைமை தாங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments