2026 ஆம் ஆண்டு இடம் பெறவுள்ள FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான பரிசுத் தொகை உலக கால்பந்து நிர்வாகக் குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டி 2026 ஜூன் 11 தொடக்கம் ஜூலை 19 ஆம் திகதி வரை கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளன. இதில் மொத்தமாக 48 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில், உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 50 மில்லியன் டொலர் பரிசுத் தொகை வழங்கப்படுமென்று உலக கால்பந்து நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
மேலும், இத்தொடரின் மொத்த பரிசுத் தொகை 727 மில்லியன் டொலர் என்றும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் முழுவதும் பங்கேற்கும் 48 அணிகளுக்கும் பணம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான பரிசுத் தொகை விவரங்கள் பின்வருமாறு:
வெற்றியாளர்:50 மில்லியன் டொலர்
இரண்டாம் இடம்: 33 மில்லியன் டொலர்
மூன்றாம் இடம்: 29 மில்லியன் டொலர்
நான்காம் இடம்: 27 மில்லியன் டொலர்
5-8 இடங்கள்: 19 மில்லியன் டொலர்
9-16 இடங்கள்: 15 மில்லியன் டொலர்
17-32 இடங்கள்: 11 மில்லியன் டொலர்
33-48 இடங்கள்: 9 மில்லியன் டொலர்
இதற்கு முன்னதாக வெற்றியாளர்களுக்கான இப்பரிசுத் தொகை 2022ல் 42 மில்லியன் டொலர் மற்றும் 2018இல் 38 டொலர் மில்லியனாக அமைந்திருந்தது.

0 Comments