Ticker

10/recent/ticker-posts

GCE (A/L) பரீட்சை முடிவுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு.

2025 ஆம் ஆண்டுக்கான GCE (A/L) பரீட்சை தற்போதைய பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தாலும், திட்டமிட்டபடி 2026 ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் என்று இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

GCE (A/L) பரீட்சைகள் கடந்த 2025 நவம்பர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு டிசம்பர் 01 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

நாட்டின் சீரற்ற வானிலை காரணமாக, நவம்பர் 27 வரை பரீட்சைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சையை 2026 ஜனவரி 12 ஆம் திகதி முதல் நடத்த பரீட்சை திணைக்களம் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான GCE (A/L) பரீட்சையின் விடைத்தாள்களின் மதிப்பீடு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் பரீட்சை முடிவுகளை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments