Ticker

10/recent/ticker-posts

GCE (A/L) தொடர்பில் வெளியான அறிவிப்பு

 2025 ஆண்டு கல்வி GCE (A/L) பரீட்சையின் ஒத்தி வைக்கப்பட்ட பாடங்களுக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் முகவரிகளில் அனர்த்தங்கள் காரணமாக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு அறியப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, 0112784537 அல்லது 0112788616 எனும் தொலைபேசி இலக்கங்களினூடாக தகவல்களை அறியப்படுத்த முடியுமென்றும் அனர்த்தங்கள் காரணமாக விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அல்லது தேசிய அடையாள அட்டைகள் (NIC) சேதமடைந்தாலோ அல்லது அழிக்கப்பட்டிருந்தாலோ, அவ்விடயங்கள் தொடர்பிலும் உடனடியாக அறிவித்துத் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். 

முன்னர் ஒதுக்கப்பட்ட பரீட்சை மத்திய நிலையங்களுக்கு செல்ல முடியாத பரீட்சார்த்திகள், முன்கூட்டியே பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அல்லது பாடசாலை அதிபருக்கோ அறியப்படுத்த வேண்டும். அவ்வாறான பரீட்சார்திகளுக்கு மாற்றுப் பரீட்சை மத்திய நிலையங்கள் ஒழுங்கு செய்யப்படவுள்ளதென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments