Ticker

10/recent/ticker-posts

'சுரக்ஷா' மாணவர் காப்புறுதித் திட்டம் அமுல்.

'சுரக்ஷா' மாணவர் காப்புறுதியை 2025/26 ஆண்டில் அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளால் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படுகின்ற மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வசதியளிக்கும் நோக்கில் அமுல்படுத்தப்படுத்தியுள்ள ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் கோபரேசன் ஜெனரல் லிமிட்டட் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

இதன் மூலமாக, அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் விஷேட உதவிப் பாடசாலைகளில் கல்வி கற்கின்ற 40 இலட்சம் மாணவர்களுக்கு சுகாதாரக் காப்புறுதி, விபத்துக் காப்புறுதி மற்றும் ஆயுள் காப்புறுதி வகுதிகளின் கீழ் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் இதன் மூலமாக வழங்கப்பட்டுள்ளன. 

இந்நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்தும் போது அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகளையும் கருத்திற் கொண்டு, கீழ்க்காணும் திருத்தங்களை உட்சேர்த்து, ‘சுரக்ஷா’, மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித் திட்டத்தை 2025/26 ஆண்டில் அமுல்படுத்துவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அதற்கமைய, ஏற்புடைய சுற்றறிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை வெளியிடுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள விடயங்களைக் கருத்திற் கொண்டு, அதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது. 

  • 2025/26 ஆண்டுக்குரிய ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித் திட்டத்தை 2026.08.31 வரை நடைமுறைப்படுத்தல்.
  • பெற்றார் உயிரிழப்பின் போது வழங்கப்படுகின்ற அனுகூலங்களை வழங்கும்போது கருத்திற் கொள்ளப்படும் குறைந்த வருமானம் கொண்ட வகுதியின் ஆண்டுக்கான வருமானம் 180,000/- ரூபாய் தொடக்கம் 240,000/- ரூபாவாக திருத்தம் செய்தல்.
  • விகாரமடைந்த முதுகெலும்பை நேர்த்தி செய்வதற்கு அணிகின்ற கருவி (Scoliosis Brace) மற்றும் செவிப்புலக் கருவிக்கு (Cochlea Equipment) 75,000/- ரூபாய் வரை அனுகூலங்களை வழங்குதல்.
  • தீவிர நோய் வகுதிக்குட்பட்ட நோய்களுக்காகவும், மேலும் அடையாளம் காணப்பட்ட 07 நோய்களுக்காக நீண்டகாலமாக சிகிச்சைகளைப் பெற்று வரும் மாணவர்களுக்கு 20,000/- ரூபாய் வரை அனுகூலங்களை வழங்கல்.
  • தீவிர நோய் வகுதிகளுக்கான Pneumothorax, Encephalitis, Thalassemia, Hereditary spherocytosis மற்றும் Sickle cell anemia போன்ற நோய்களை புதிதாககச் சேரத்துக் கொள்ளுதல். 
  •  2025.09 முதலாம் திகதி தொடக்கத்திலி ருந்து அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை விண்ணப்பங்கள் இலங்கை இன்சுரன்ஸ் கோப்பரேசன் ஜெனரல் லிமிட்டட் இன் எந்தவொரு பிராந்திய அலுவலகத்தின் மூலமாக வழங்குவதற்கு வாய்ப்பு வழங்கல்.

Post a Comment

0 Comments