சவூதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு மமாத்திரம் ம் மது விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், வெளிநாடுகளைச் சோ்ந்த முஸ்லிம் அல்லாத செல்வந்தா்களும் மது வாங்கிக் கொள்ளலாம் என்று தளா்வு அளிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் இஸ்லாம் அல்லாத சிறப்புக் குடியுரிமை பெற்றவா்களுக்கு மது விற்பனை விரிவாக்கப்பட்டுள்ளது.
இவா்கள் பெரும்பாலும் வெளிநாடுகளைச் சோ்ந்த பெரிய முதலீட்டாளா்கள், தொழில் முனைவோா், சிறப்புத் திறன்களுக்காக சவூதிக்கு வரவழைக்கப்பட்டவா்கள், முக்கியமாக பெரும் செல்வந்தவா்களுக்கு இந்த தளா்வு அளிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா தொடா்ந்து மசகு எண்ணெய் ஏற்றுமதியை மாத்திரமே சாா்ந்திருக்கக் கூடாது, சுற்றுலா, சா்வதேச தொழில்களின் மையமாக மாற வேண்டும்மென்ற நோக்கத்தில் மன்னா் சல்மான், பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான ஆகியோா் பல்வேறு தாராளமய கொள்கைகளை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments