Ticker

10/recent/ticker-posts

ஒரே ஓவரில் 05 விக்கெட்டுகள்: வரலாற்றுச் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 05 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தோனேசியா வீரரான கெடே பிரியந்தனா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 

இந்தோனேசியா - கம்போடியா அணிகளுக்கு இடையேயான T20 தொடர் நடைபெற்று வருகின்றது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் T20 போட்டி பாலி நகரில் நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தோனேசிய அணி 168 ரன்களை எடுத்தது. தொடர்ந்து 169 ரன்கள் இலக்குடன் விளையாடிய கம்போடியா அணி 15 ஓவர்கள் முடிவில் 05 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது 16 வது ஓவரை வீசிய கெடே பிரியந்தனா, குறித்த ஓவரில் முதல் 03 பந்துகளில் 03 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 04 வது பந்தில் விக்கெட் வீழ்த்தவில்லை. 05 வது மற்றும் 06 வது பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தோனேசியா அணியை வெற்றி பெறச் செய்தார்.

இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் கெடே பிரியந்தனா 01 ஓவரில் 05 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக நட்சத்திரப் பந்து வீச்சாளர்களான மலிங்க , ரஷீத் கான் ஆகியோர் ஒரு ஓவரில் 04 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த நிலையில், கெடே பிரியந்தனா 05 விக்கெட்டுகள் வீழ்த்தியமை பெரும் கவனத்தை பெற்றுள்ளது.


Post a Comment

0 Comments