தென்னிந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பெயரில் கனடாவில் புதிய தெருவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இந்திய வம்சாவளியினர் அதிகம் வாழும் பகுதிகளில் இந்திய பிரபலங்களின் பெயரில் 02 தெருக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்திய சினிமா மற்றும் இசையின் உலகளாவிய தாக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகின்றது.
இந்நிலையில், தென்னிந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பெயரில் புதியதொரு தெரு அமைக்கப்பட்டுள்ளது.
பிராம்ப்டன், ஒன்ராறியோவில் இந்திய சினிமாவின் “ஷோமேன்” என்று அழைக்கப்படும் ராஜ் கபூரின் பெயரில் தெரு மற்றுமொரு தெரு அமைக்கப்பட்டுள்ளது.
பிராம்ப்டன் நகரம், பல்வேறு கலாசார பங்களிப்புகளை மதிக்கின்ற வகையில், தெரு பெயர்களில் குறித்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. கனடா நாட்டில் ல் சுமார் 2.88 மில்லியன் இந்திய வம்சாவளியினர் வாழ்கின்றனர்.
இந்த தெருக்கள், இந்திய சினிமா மற்றும் இசை, அந்நாட்டு நகர வாழ்க்கையின் நிலையான அடையாளமாக மாறியுள்ளதையும் காட்டுகின்றன.
சுற்றுலா இடங்களாக இல்லாவிட்டாலும், இவை கலாசாரச் சின்னங்களாக பெரிதும் மதிக்கப்படுகின்றன.
எனவே, ராஜ் கபூர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இத்தெருக்கள், இந்திய கலைஞர்களின் உலகளாவிய தாக்கத்தையும், கனடாவின் பல்வேறு கலாசாரங்களை மதிக்கும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Comments