Ticker

10/recent/ticker-posts

"இனிமேல் கிரிக்கெட் விளையாட கூடாது என நினைத்தேன்" : வேதனையை பகிர்ந்த ரோஹித் சர்மா

தோல்விக்கு பின்னர் "கிரிக்கெட் விளையாட வேண்டாம்" என்று நினைத்தாக ரோஹித் சர்மா பேசியுள்ளார்.

2023 உலக கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்தது.  

குருகிராமில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் யூனியன் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ரோஹித் சர்மா, இத்தோல்வியால் ஏற்பட்ட மன வேதனை குறித்தும் பேசியுள்ளார். 

இதில் பேசிய அவர், "உலகக் கோப்பையை வெற்றி கொள்வதே எனது ஒரே குறிக்கோளாக இருந்தது. அது T20 உலகக் கோப்பையாயினும் சரி; 2023 ODI உலகக் கோப்பையாயினும் சரி.

ஆனால், எல்லோரும் பெரும் ஏமாற்றமடைந்தனர், என்ன நடந்தது என்று எங்களால் நம்பவே முடியவில்லை. அந்த உலகக் கோப்பைக்காக 2022 ஆம் ஆண்டில் நான் அணித்தலைவர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதிலிருந்து தயாரானேன்.

ஆனால் அது நடக்காதபோது, ​​நான் முழுமையாக மனமுடைந்து போனேன். எனது உடலில் எந்த சக்தியும் இல்லை. ஒரு கட்டத்தில், இந்த விளையாட்டு என்னிடமிருந்து எல்லாவற்றையும் பறித்து விட்டதால், இனிமேல் கிரிக்கெட் விளையாட வேண்டாம் என்று நினைத்தேன். 

ஒரு விடயத்​தில் அதி​க​மாக முதலீடு செய்​து, அதற்​கான பலன் கிடைக்​க​வில்லையென்றால், மிகுந்த ஏமாற்றமடைவது இயல்பானதுதான். எனக்கும் அது​தான் நடந்​தது.

ஆனால், வாழ்க்கை அங்கேயே முடிவடைந்து விடாது என்பதையும் நான் அறிந்திருந்தேன். கிரிக்கெட் நான் உண்மையிலேயே விரும்பும் ஒன்று. அது என் கண் முன்னால் இருந்தது. 

எனது அணியை ஏமாற்றி விட்டேன். நெருக்கடியான சூழலில் அணியின் கேப்டனான வீரராக அணியை ஏமாற்றி விட்டேன்; நெருக்கடியான சூழலில் கேப்டனான வீரர் அதனை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது என்பதை நான் எனக்குள் நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தேன். மெதுவாக இழந்த சக்தியைப் பெற்று மீண்டும் மைதானத்திற்கு வந்தேன். மீண்டும் என்னை பழைய நிலைக்குக் கொண்டு வர எனக்கு 02 மாதங்கள் ஆனது" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments