போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியை அடுத்த 02 தசாப்தங்களுக்குள் ஓர் உயர் தொழிநுட்ப, ஆடம்பரமான கடலோர நகரமாக மாற்றுவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தயாரித்த குறித்த முன்மொழிவானத்து, சாத்தியமான நன்கொடை வழங்கும் நாடுகளின் முன் சமீபத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
காசாவின் தற்போதைய அழிவடைந்த உட்கட்டமைப்புகளை முற்றிலுமாக மறுசீரமைத்து, நவீன தொழிநுட்ப வசதிகள், வணிக மையங்கள், குடியிருப்பு வளாகங்கள் மற்றும் சுற்றுலா சார்ந்த வளர்ச்சிகளை உருவாக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த மறுசீரமைப்பு முயற்சி நீண்டகால பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பிராந்திய நிலைத் தன்மையை நோக்கமாகக் கொண்டதாகவும் அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், காசாவின் அரசியல் நிலை, பாதுகாப்பு சவால்கள் மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளின் காரணமாக இத்திட்டம் நடைமுறைக்கு வரும் சாத்தியக்கூறு குறித்து பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்த முன்மொழிவு குறித்து இதுவரை காசா நிர்வாகம் அல்லது பிராந்திய நாடுகள் அதிகாரப்பூர்வமாக எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
இருப்பினும், மத்திய கிழக்கு பகுதியில் போருக்குப் பிந்தைய மறுகட்டுமானம் குறித்த சர்வதேச விவாதங்களில் இது முக்கியமானதாகவும் பார்க்கப்படுகின்றது.

0 Comments