Ticker

10/recent/ticker-posts

இடைநிறுத்தப்பட்ட கிரீன் கார்டு (Green Card திட்டம்; அமெரிக்க ஜனாதிபதி உத்தரவு.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், க்ரீன் கார்ட் (Green Card) திட்டத்தை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அண்மையில் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் மற்றும் MIT ஆகியவற்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேக நபர், குறித்த Green Card விசா குலுக்கல் முறையிலேயே 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளமை கண்டறியப்பட்டது. 

48 வயதான போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவர், க்ரீன் கார்ட் பெற்று சட்டபூர்வமாக தங்கியிருந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

குறித்த தகவல் வெளியானதையடுத்து, உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம், ஜனாதிபதி ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் இத்திட்டத்தை உடனடியாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். 


Post a Comment

0 Comments