பாடப்புத்தகத்தில் முறையற்ற விடயம் ஒன்று அச்சிடப்பட்டுள்ளமை தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றது. இதனையடுத்து 06 ஆம் தர பாடநூலில் அச்சிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய விடயத்தை நீக்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது அரச நிதி முறைகேடு குற்றமில்லையா? இதற்கு யார் பொறுப்புக் கூறுவது என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற கடற்றொழில் மற்றும் நீர்வாழ், உயிரின வளங்கள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வீட்டின் கூரையில் பொருத்தப்பட்ட தகரமொன்று பறந்துச் சென்றால் அதற்கும் 10 இலட்சம் ரூபாய் வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் வழங்குவதாக குறிப்பிட்ட நிவாரணங்கள் ஏதும் இன்றளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை.
பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கிராம சேவகரை பின்தொடர்ந்து செல்கின்றனர். பெருந்தோட்ட மக்களுக்கு முறையான காணிகள் எதுவும் வழங்கப்படவில்லை.
நிவாரண வாக்குறுதிகள் அனைத்துமே பொய்யாக்கப்பட்டுள்ளன. ஆகவே, வழங்கிய வாக்குறுதிகள் பொய்யென்பதை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தரம் 06 பாடப்புத்தகத்தில் முறையற்ற விடயம் ஒன்று அச்சிடப்பட்டுள்ளமை தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. தரம் 06 பாடநூலில் அச்சிடப்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்தை நீக்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது அரச நிதி முறைகேடு குற்றமில்லையா?, இதற்கு யார் பொறுப்புக் கூறுவது? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

0 Comments