வெனிசுலாவின் தலைநகர் கராகஸிலுள்ள ஜனாதிபதி மாளிகையின் அருகில் அடையாளம் தெரியாத டிரோன்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உள்ளூர் நேரடி இரவு 8. 00 PM மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த டிரோன்களை வெனிசுலா பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தலைநகரில் நிலைமை சீராக இருப்பதாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் வெனிசுலா அரச தரப்பால் விளக்கம் அளித்துள்ளது.
வெனிசுலா ஜனாதிபதி மாளிகையின் அருகே டிரோன்கள் பறந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இவ்விடங்கள் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெனிசுலா மீது ஓரிரு தினங்களுக்கு முன்னர் திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவருடைய மனைவியை சிறைபிடித்து அமெரிக்கா அழைத்து வந்தது.
வெனிசுலா எண்ணெய் இருப்பை இனிமேல் அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க இராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
இதற்கிடையே வெனிசுலா உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அந்த நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார்.
அமெரிக்காவுடன் ஒத்துழைக்கவில்லை என்றால் மதுரோவுக்கு நேர்ந்ததை விடவும் மோசமான முடிவு டெல்சிக்கு ஏற்படும் என்று எச்சரித்த டிரம்ப், மீண்டும் இராணுவ தாக்குதல் நடத்த உத்தரவிட தயங்கமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

0 Comments