Ticker

10/recent/ticker-posts

50 ரூபாய் பந்தயத்திற்காக பேனாவை விழுங்கிய மாணவன்.

இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் கோத்தபேட்டையை சேர்ந்த சீனிவாச ராவ் என்பவரின் மகன் முரளி கிருஷ்ணா. 



16 வயதான முரளி கிருஷ்ணா கல்லூரியில் முதலாம் வருடத்தில் (01st Year) படித்து வருகிறார். இவர் கடந்த 03 ஆண்டுகளுக்கு முன்னர் 09 ஆம் வகுப்பு படித்து வந்தார். அப்போது இவருடைய நண்பர்கள் பேனாவை விழுங்கினால் ரூபாய் 50 தருவதாக பந்தயம் கட்டினார். அப்போது முரளி கிருஷ்ணா பேனாவை விழுங்கியுள்ளார். 

அன்றிலிருந்து முரளி கிருஷ்ணாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இருப்பினும், தனக்கு வயிற்று வலி ஏற்படுவது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. 

இந்நிலையில் கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி முரளி கிருஷ்ணாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவருடைய நண்பர்கள் கடந்த 03 ஆண்டுகளுக்கு முன்பு முரளி கிருஷ்ணா பேனாவை விழுங்கியதாக அவருடைய பெற்றோரிடம் தெரிவித்தனர். 

இதனையடுத்து, உடனடியாக முரளி கிருஷ்ணாவை குண்டூரிலுள்ள அரச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். வைத்தியசாலையில் பரிசோதனை செய்த போது அவருடைய பெருங்குடலில் பேனா இருப்பது தெரிய வந்தது. 

இதனையடுத்து வைத்தியர்கள் கவுண்டர் குழாய் மூலமாக ரெட்ரோகிரேட் எண்டோஸ்கோபி முறையில் பெருங்குடலில் இருந்த பேனாவை அறுவை சிகிச்சையின்றி அகற்றியுள்ளனர்.


Post a Comment

0 Comments