Ticker

10/recent/ticker-posts

சடுதியாக உயர்ந்த தேங்காய் விலை. ஒரு தேங்காய் எவ்வளவு தெரியுமா?

நாட்டில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளபோதும், சந்தையில் தேங்காயின் விலை சடுதியாக உயர்ந்துள்ளமையைக் கட்டுப்படுத்துவதற்கு தென்னை பயிர்ச்செய்கை சபை நேரடித் தலையீட்டை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் ஒரு தேங்காய் 122 - 124 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இருப்பினும், வெளிச்சந்தையில் அதே தேங்காய் 180 - 200 ரூபாய் வரையிலான அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தென்னை பயிர்ச் செய்கை சபையின் பணிப்பாளரான சுனிமல் ஜயகொடி தெரிவித்துள்ளார்.

ஏலத்தில் குறைந்த விலைக்கு தேங்காய்களை வாங்கி, நுகர்வோருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்ற இடைத்தரகர்களே குறித்த விலையேற்றத்திற்குக் காரணம் என்றும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதன்படி, சபையினால் நிர்வகிக்கப்படுகின்ற 11 தென்னந்தோட்டங்களிலிருந்து பெறப்படும் தேங்காய்கள் எவ்வித இடைத்தரகர்களுமின்றி நேரடியாகவே நுகர்வோருக்கு வழங்கப்படவுள்ளன.

கடந்த வருடம் நாட்டில் 2,900 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இவ்வருடம் குறித்த எண்ணிக்கை 3,000 மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு, பூச்சிகள் மற்றும் ஏனைய விலங்குகளினால் ஏற்படும் சுமார் 10 சதவீத அறுவடை இழப்பைத் தடுப்பதற்கான விஷேட பாதுகாப்புத் திட்டங்களும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுனிமல் ஜயகொடி மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments