Ticker

10/recent/ticker-posts

செயற்கை ‘கோமா’ நிலையில் அவுஸ்திரேலியாவின் பிரபல வீரர்.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் டேமியன் மார்ட்டின் (54), குவீன்ஸ்லாந்து மாகாண வைத்தியசாலையில் மூளைக்காய்ச்சல் (Meningitis) நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி பாக்ஸிங் டே (Boxing Day) அன்று திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் செயற்கை கோமா நிலையில் இருப்பதாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

டேமியன் மார்ட்டின், கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராவார். 1992 தொடக்கம் 2006 வரை அவுஸ்திரேலிய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 06 வருட இடைவெளிக்குப் பின்னர் 2000 ஆம் ஆண்டு மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்ட இவர், ஸ்டீவ் வாஹ் தலைமையிலான 'Invincibles' என அழைக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணியின் முக்கியமான வீரராகவும் திகழ்ந்தார். 

2006 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் நடுவில் அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். தனது டெஸ்ட் வாழ்க்கையில் 4,406 ஓட்டங்கள் 13 சதங்களுடன் அவர் 46.37 என்ற சராசரியை வைத்திருந்தார். 

ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட்டிலும் டேமியன் மார்ட்டின் ஆஸ்திரேலிய அணிக்காக பெரும் பங்களிப்பு செய்துள்ளார். 2003 உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியின் இறுதிப் போட்டியில், இந்தியாவுக்கெதிராக 88 ஓட்டங்களை குவித்தார். இப்போட்டியில் சதம் விளாசிய ரிக்கி பாண்டிங்குடன் சேர்ந்து 234 ஓட்டங்களை சேர்த்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 5,346 ஓட்டங்கள் சராசரி 40.80, ஐந்து சதங்களாகும்.

தற்போது கிரிக்கெட் உலகமே டேமியன் மார்ட்டின் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றது.


Post a Comment

0 Comments