Ticker

10/recent/ticker-posts

ஜனாதிபதியின் புதிய ஆலோசகராக கலாநிதி மகிந்த பரக்கிரம திசாநாயக்க நியமனம்

இலங்கையினுடைய கடல்சார் துறை, துறைமுகங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி முகாமைத்துவத்தை (Supply Chain) மேம்படுத்தும் நோக்கில், கலாநிதி மகிந்த பரக்கிரம திசாநாயக்க (Dr. Mahinda Parakrama Disanayake) அவர்கள் ஜனாதிபதியின் விஷேட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 41(1) உறுப்புரைக்கிணங்க, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடல்சார் மற்றும் துறைமுக விவகாரங்கள் மற்றும் விநியோக விவகாரங்களுக்கான (Maritime, போர்ட்ஸ் & Supply Affairs) ஜனாதிபதி ஆலோசகராக அவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments