இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தொடரின் முதலாவது T20 போட்டி இன்று (07) தம்புள்ளையில் இடம் பெறுகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணியினர் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்ததுடன் 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
போட்டியில் இலங்கை அணி சார்பில் ஜனித் லியனகே அதிகபட்சமாக 40 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொடுத்தார். பாகிஸ்தான் அணி சார்பில் சல்மான் மிர்ஷா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், 129 எனும் வெற்றியிலக்கு பாகிஸ்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

0 Comments