சீனாவிலுள்ள சியாங்யா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரு தொழிற்சாலைத் தொழிலாளியான திரு. ஷோவ் என்பவருடைய இடது 'கை'யின் ஒரு பகுதி கடுமையான இயந்திர விபத்தில் மீண்டும் இணைக்க முடியாத அளவுக்கு துண்டிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் டாங் ஜூயு என்பவரின் தலைமையிலான மருத்துவக் குழு இதற்காக ஒரு புத்திசாலித்தனமான தீர்வை வகுத்துள்ளது. கையின் இரத்த ஓட்டத்தைத் தக்க வைப்பதற்காக உடனடியாக செயற்பட்டு துண்டிக்கப்பட்ட கையை ஷோவ் என்பவரின் கெண்டைக்காலில் ஒட்ட வைத்தனர்.
அவருடைய கை குணமாகும் வரை, அந்த 'கை' ஒரு மாதம் வரை அவருடைய காலிலேயே இணைக்கப்பட்டிருந்தது. ஒரு சிக்கலான தொடர் அறுவை சிகிச்சையில், மருத்துவர்கள் அந்த கையை அதன் அசல் நிலையில் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளனர்.
இந்த முயற்சியின் பின்னர், ஷோவ் தனது கையில் ஓரளவு அசைவுத் திறனை மீண்டும் பெற்றுள்ளார். இது நவீன புனரமைப்பு நுண் அறுவை சிகிச்சைக்கு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகின்றது.

0 Comments