பேராசிரியர் சரித ஹேரத் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட இவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக கட்டுகம்பொல தேர்தல் தொகுதியின் அமைப்பாளராகப் பணியாற்றி தனது ஆதரவை வழங்கியிருந்தார்.
பேராசிரியர் சரித ஹேரத்தின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதமாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments