Ticker

10/recent/ticker-posts

உலகம் அழியும் எனக் கூறிய எபோ நோவா கைது

மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள 'கானா' நாட்டின் தலைநகரம் அக்ரா ஆகும். 

இந்த ஊரில் இவான்ஸ் எஷுன் எனும் நபர் தன்னை ‘எபோ நோவா’ என்று அழைத்துக் கொண்டு கடந்த 2025 டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என்று கூறி பீதியை கிளப்பியதால் கானா நாட்டு பொலிஸின் இணையவழி குற்றப் பிரிவினரால் நேற்று (31) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவர் தன்னை தீர்க்கதரிசியென்று கூறிக் கொண்டு, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி பொது மக்களின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியமையே குறித்த கைதுக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

எபோ நோவா கடந்த ஆகஸ்ட் மாதம் பெரியளவிலான மரக் கப்பலை கட்டும் வீடியோக்கள் வைரலாகி உலகளவில் பிரபலமானார். 

பின்னர் 'நத்தார் தினத்தில் என்னுடைய வேண்டுதலை கடவுள் ஏற்றுக் கொண்டு விட்டார். அதனால் உலகை அழிக்கும் முடிவினை கடவுள் ஒத்தி வைத்திருக்கின்றார். இதனால் தொடர்ந்து இன்னும் பல கப்பல்களை கட்டப் போகின்றேன். அதற்காக எனக்கு கடவுள் போதிய நேரம் கொடுத்திருக்கின்றார்' என்று கூறிய அவர் நோவாவை தேடி வந்த மக்களிடம் "கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்; மகிழ்ச்சியாய் இருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதனால் மக்கள் பெரும் கோபடைந்தனர். அவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் அவர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

எபோ நோவா மழுப்பலாக காணொளி (Video) வெளியிட்டுள்ள நிலையில், அவரை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாக தெரிவித்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.


Post a Comment

0 Comments