Ticker

10/recent/ticker-posts

நெல்லுக்கான விலை அதிகரிப்பு: அரிசி விலையில் தொடர்பில் வெளியான தகவல்

அடுத்த போகத்திலிருந்து நெல்லின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

சம்பா மற்றும் கீரிசம்பா நெல் வகைகளின் விலையை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இருப்பினும், அரிசியின் விலையில் எவ்வித அதிகரிப்பும் இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

நெல்லின் விலையில் திருத்தம் மேற்கொள்வது குறித்து ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாகவும், குறிப்பாக நாடு நெல் 120 ரூபாயாக இருக்குமென்றும், சம்பா நெல்லின் விலை 125 தொடக்கம் 130 ரூபாயாக உயர்த்தப்படுமென்றும் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.  

அதே சமயம், கீரி சம்பாவின் விலை விவசாயிகளின் தரப்பைப் பொறுத்து 132 தொடக்கம் 140 ரூபாயாக அதிகரிக்கலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 


Post a Comment

0 Comments