தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பல்வேறு பிரச்சனைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் கடந்து தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளதுடன், திரைப்பட தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.
கடந்த மாதம் இயக்குனர் ராஜ் நிடிமொருவை, கோவையில் இரகசிய திருமணம் செய்துகொண்ட சமந்தா, தேனிலவு கொண்டாட்டங்கள் முடிந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பில் பிசியாகி இருக்கிறார்.
இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாகிவரும் 'மா இண்டி பங்காரம்' என்ற தெலுங்கு படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாக போவதாக அறிவித்துள்ளார். 03 வருடங்கள் கழித்து வெளிவரும் அவருடைய படத்தின் அறிவிப்பு இரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
அதேவேளை பலரும் திருமணமானதால் 'நாங்க வேற குட் நியூஸ் எதிர்பார்த்தோமே.' என்றும் சமூக வலைத்தளங்களில் 'கமெண்ட்' அடித்து வருகின்றனர்.
சமந்தா இறுதியாக 'குஷி' (2023) என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் 'சுபம்' என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments