2025 ஆம் ஆண்டுக்கான GCE (A/L) பரீட்சையின் சில பாடங்களுக்குத் தோற்ற முடியாமல் போன மாணவர்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 2026 ஜனவரி 12 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை அனர்த்தங்களால் நாட்டின் பல பாகங்களிலும் பரீட்சை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இக்காலப்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகளுக்குச் சமூகமளிக்க முடியாத மாணவர்களுக்காகவே இப்புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக அறிந்துகொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

0 Comments