Ticker

10/recent/ticker-posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (08) சில இடங்களில் 100 mm இற்கும் அதிகமான பலத்த மழை பொழியக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் என்று எதிர்வு கூறியுள்ளது. 

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பகுதிகளில் விரித்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இது தற்போது பொத்துவிலுக்கு தென்கிழக்காக சுமார் 700 KM தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வடமேற்கு திசையில் நாட்டின் கிழக்கு கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் உள்ளது. எனவே வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை இன்று (8) முதல் மேலும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் நேற்று (7) முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்வதையும் மீன்படி நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் தவிர்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments