Ticker

10/recent/ticker-posts

நெல் கொள்வனவுக்கான விசேட அறிவித்தல்

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சலுகை வட்டியிலான கடன் வழங்கும் திட்டம் ஒன்று இன்று (1) முதல் அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 

தற்போதைய பெரும்போக பருவத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில் இக்கடன் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆண்டுக்கு 07 சதவீத சலுகை வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக 50 மில்லியன் ரூபாய் வரை கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும். 

இவ்வாறாகப் பெறப்படும் கடன் தொகையை 180 நாட்களுக்குள் மீளச் செலுத்த வேண்டும் எனும் நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments