Ticker

10/recent/ticker-posts

பங்களாதேஷின் தேசியவாத கட்சி உறுப்பினர் சுட்டுக்கொலை

பங்களாதேஷில் தேசியவாத கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் 2026 பெப்ரவரி 12 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அடுத்தடுத்த கொலை சம்பவங்களால் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

பங்களாதேஷின் மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கடந்த 2025 டிசம்பர் 18 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில், பங்களாதேஷின் தேசியவாத கட்சியைச் சேர்ந்த அஷிசூர் ரஹ்மான் முஷாபிர் என்பவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்காவின் கர்வான் பகுதியில் நேற்று முன்தினம் (06) இரவு, முஷாபிரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதையடுத்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மற்றொரு நபர் பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரனை செய்து வருகின்றனர்.


To join with whatsapp group:

https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x

Post a Comment

0 Comments