Ticker

10/recent/ticker-posts

இலங்கை கிரிக்கெட்டுடன் இணையும் முன்னாள் இந்திய வீரர் ரத்தோர்

பெப்ரவரியில் ஆரம்பமாகும் ICC ஆடவர் T20 உலகக் கிண்ணத்தை இலக்கு வைத்து இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், அவர் எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி தொடக்கம் கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார். மேலும், உலகக் கிண்ணம் நிறைவடைந்தவுடன் 2026 மார்ச் 10 ஆம் திகதி வரை இவர் பணியாற்றவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் இங்கிலாந்து தொடரின் போது ரத்தோர் இலங்கை அணியுடன் இணைந்து பணியாற்றுவார். உலகளாவிய போட்டிக்கு முன்னர் இலங்கையின் துடுப்பாட்ட ஆயத்தங்களை இவர் வலுப்படுத்தவுள்ளார்.

2019 - 2024 வரை இந்தியா அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக பணியாற்றிய ரத்தோர், தற்போது ராஜஸ்தான் ரோயல்ஸின் உதவி பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments